உக்ரைனிலிருந்து 90% மாணவர்கள் மீட்பு கடைசி மாணவரை மீட்கும் வரை பணி தொடரும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு

சென்னை: பிரதமரின் பாரதிய ஜன சாதி கேந்தி  சார்பில், ‘மக்கள் மருந்தகங்கள்’ மூலமாக ஒரு வார கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், சென்னை சவுகார்பேட்டை தங்கசாலை பகுதியில் நடைபெற்ற முகாமை ஒன்றிய இணை அமைச்சர் எல் முருகன் நேற்று நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் கூறியதாவது: ஏழைகளுக்கு தரமான மருந்துகள், குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதே மக்கள் மருந்தகங்களின் நோக்கம். இந்தியா முழுவதும் 36 மாநிலங்களில் , 8675 இடங்களில் மருத்துவ முகாம் நடக்கிறது. மக்கள் மருந்தகம் மூலம் 1451 வகையிலான மருத்துகளும், 240 க்கும் மேல் அறுவை சிகிச்சை உபகரணங்கள்  விற்பனை செய்யப்படுகிறது. உக்ரைனிலிருந்து 90 சதவீதம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். கடைசி மாணவரை மீட்கும் வரை பணி நடக்கும். மாணவர்களை சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்த நீட் அவசியம். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரி திறப்பினால் இந்த ஆண்டு 5 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக  சேர்ந்துள்ளனர். மேகதாது திட்டம் தொடர்பாக, தமிழகம், கர்நாடாக ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே சுமுகமான முறையில் பேசி தீர்வு காணப்படும். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் சாத்தியம் என்பதாலேயே, அதை மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலங்கள் திட்டம் தொடர்பான விளக்க அறிக்கை  தந்தவுடன் மத்திய அரசு திட்டத்தை தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை