ஈளடா தடுப்பணை நிரம்பியதால் குடிநீர் தட்டுப்பாடு இல்லை

கோத்தகிரி: கோத்தகிரி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான ஈளடா தடுப்பணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஈளடா, கதகட்டி, கெரடாமட்டம், கைக்காட்டி, ஓம்நகர், வார்விக், புதூர், கேர்ப்பட்ட போன்ற 20க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளில் வசிக்கும் மக்களின்  முக்கிய குடிநீர் ஆதாரமாக ஈளடா தடுப்பணை விளங்குகிறது. இங்குள்ள கிராமப்புற பகுதிகளில் அதிகளவு விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலையில் குடிநீர் மட்டுமின்றி விவசாயத்திற்கும் இந்த நீரை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதத்திற்கு முன் அணையில் தண்ணீர் குறைந்ததன் காரணமாக குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அணையின் முழுக் கொள்ளளவான 12 அடியை எட்டியுள்ளது. தற்போது அணையில் போதியளவு  நீர் இருப்பு உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவாய்ப்பில்லை என்றும், இன்னும் 2 மாதங்கள் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நடவடிக்கை!!

84 நீர்நிலைகளில் படிந்துள்ள களிமண், வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுக்க அனுமதி: அரசிதழில் வெளியீடு