ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வன்முறையை தூண்ட அதிமுக திட்டம்: தேர்தல் ஆணையத்திடம் புகார்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் வன்முறையை தூண்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் தேசிய முன்னேற்ற கழக தலைவர் ஜி.ஜி.சிவா அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவருக்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கியுள்ள இடங்களில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அன்பளிப்புகளை குவித்து வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களில் 40 ஆயிரம் பேர் போலி வாக்காளர்கள் என சி.வி.சண்முகம் பொய்யான தகவலை பரப்பி வருகிறார். இப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் கலவரம், வன்முறையை தூண்டிவிட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செயல்பட தொடங்கியிருக்கிறார்கள். எனவே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்….

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு