இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம் ஜிசாட்-1 செயற்கைக்கோள் ஆக.12ல் விண்ணில் பாயும்

பெங்களூரு:  கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த நிலையில் இஸ்ரோ  நிறுவனம் அடுத்தடுத்து செயற்கைக்கோள்களை ஏவும் வகையில்  செயல் திட்டங்களை வகுத்துள்ளது.   வரும்  ஆகஸ்ட்  மாதம்  12 தேதி காலை 5்.43க்கு  ‘ஜிஎஸ்எல்வி-எப் 10’ விண்கலத்தை பயன்படுத்தி  செயற்கைக்கோள் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ அதிகாரி கூறுகையில், ‘‘ஜிசாட் -1   செயற்கைக்கோள் இந்திய துணைக் கண்டத்தின் நிகழ் நேர கண்காணிப்புக்கு பயன்படும்.  மேக கூட்டங்களை தாண்டி புயல் போன்ற இயற்கை  மாற்றங்களை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.  ஜிசாட் -1   ஜிஎஸ்எல்வி-எப் 10, உதவியால்  புவிசார் ஒத்திசைவு சுற்றுப்பாதைக்கு கொண்டு  செல்லப்படும். பின்னர், இது பூமியின் பூமத்திய ரேகைக்கு 36,000  கி.மீ உயர சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.   ஜிசாட்டில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகளை பயன்படுத்தி. பூமி  கண்காணிப்பு,  எல்லைகளின் நிகழ்நேர படங்களை தெளிவாக அறிய முடியும்,’’ என்றார்….

Related posts

உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவம் எதிரொலி; ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து

கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலர் பெங்களூருக்கு மாற்றம்

பாஜ மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!