இஸ்ரேல் பிரதமருடன் மோடி பேச்சு

ஜெருசேலம்: கடந்த ஆண்டு ஜூன் மாதம், இஸ்ரேல் பிரதமராக பதவியேற்ற நப்தாலி பென்னெட்  இந்த மாதம் 3 முதல் 5ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார்.  அவருக்கு கடந்த மாதம் 28ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்திய சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நப்தாலி பென்னெட்நேற்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். மேலும் இஸ்ரேலில் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததற்காகவும், இறந்தவர்களுக்கு அனுதாபங்களை வெளியிட்டதற்காகவும் பிரதமர் மோடியை நப்தாலி பாராட்டினார். ஆனால், பென்னெட்டின் இந்திய பயணம் எப்போது என்பது குறித்து  தகவல் வெளியிடப்படவில்லை….

Related posts

2ம் கட்டமாக நடந்த ஈரான் அதிபர் தேர்தல் பெசஸ்கியான் வெற்றி: ஒரு மாதத்திற்குள் பதவியேற்பு

இங்கிலாந்து புதிய பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி பேச்சு: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய உறுதி

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி