இளையான்குடி வட்டாரத்தில் பயிர் இன்சூரன்ஸ் வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இளையான்குடி, அக்.20: இளையான்குடி வட்டாரத்தில் கடந்த ஆண்டு சுமார் 16 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டது. போதிய மழையில்லாததால், நெல் மகசூல் பெருமளவு பாதிக்கப்பட்டது. அதனால் கடந்த ஆண்டிற்குறிய பயிர் நிவாரணத் தொகை கடந்த சில வாரங்களுக்கு முன்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும் நெல் சாகுபடி பாதிக்கப்பட்ட 54 வருவாய் கிராமங்களில், 12 வருவாய் கிராமங்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் வழங்கப்படும் என அறிவிப்பு வந்த நிலையில், மேலும் பாதிக்கப்பட்ட வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். அதனால் இளையான்குடி வட்டாரத்தில் மீதமுள்ள பாதிக்கப்பட்ட 42 வருவாய் கிராம விவசாயிகளுக்கு, கடந்த ஆண்டிற்குறிய பயிர் இன்சூரன்ஸ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி,

பத்துக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் சார்பில், நேற்று காலை இளையான்குடி தாலுகா ஆபிஸ் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விவசாய பிரதிநிதிகளுடன் பேசிய தாசில்தார் கோபிநாத், அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய ஆவணம் செய்யப்படும் என்றார். அதனடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி