இளநீர் பாயசம்

செய்முறை இளநீரை தண்ணீர் மற்றும் வழுக்கையை தனியாக எடுத்து
வைக்கவும். இளநீர் வழுக்கையை பொடியாக நறுக்கவும். பாலை நன்கு காய்ச்சி
குளிர வைக்கவும். பால் நன்கு ஆறியதும் அதில் நறுக்கிய இளநீரை சேர்த்து
நன்கு கலக்கவும். அதனுடன் மில்க்மெய்ட் மற்றும் சர்க்கரை, ஏலக்காய் பொடியை
சேர்த்து நன்கு கலக்கவும். இளநீர் தண்ணீரை மிதமாக சூடு செய்து அதனை பால்
கலவையில் சேர்த்து கலந்து வைக்கவும். பிறகு நெய்யில் முந்திரி, உலர்ந்த
திராட்சையை வறுத்து நன்கு ஆறியதும் இளநீர் கலவையில் சேர்க்க வேண்டும். இதனை
அப்படியே அல்லது ஃபிரிட்ஜில் வைத்து குளிர்ந்த பிறகும் சாப்பிடலாம்.

Related posts

பலாக்கொட்டை துவையல்

வாழைக்காய் தேன்குழல்

செம்பருத்திப்பூ பருப்பு அடை