இலுப்பைதோப்பு அருகே முறைகேடாக மது விற்றவர் கைது

 

பாடாலூர், ஜூலை 6: ஆலத்தூர் தாலுகா இலுப்பைதோப்பு அருகே சட்ட விரோதமாக மது விற்றவரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா ஜெமீன் ஆத்தூர் கிராமத்தில் இலுப்பை தோப்பு அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக நேற்று தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி தனிப்படை சிறப்பு எஸ்எஸ்ஐ கோவிந்தசாமி தலைமையிலான போலீசார் அன்பழகன் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் முருகேசன் மகன் சத்யராஜ் (31) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் மது பாட்டில்கள் விற்றது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவரை குன்னம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 25 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை குன்னம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்