இலவச பட்டா நிலத்தை அளந்து தர வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு

 

அரியலூர், செப் .10: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தமிழக அரசால் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய இலவச வீட் டுமனை பட்டாவுக்கான நிலத்தை அளந்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அறங்கோட்டையைச் சேர்ந்த பட்டியலினத்தவர்கள் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அறங்கோட்டை காலனித் தெருவில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களுக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா தமிழக அரசு வழங்கியது. ஆனால், 17 ஆண்டுகளாகியும் இதுவரை தமிழக அரசு அந்த மனைகளை அளந்து தரவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவ ட்ட ஆட்சியர், எங்களது கோரிக்ககை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடு க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி