இலத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு திடீர் ஆய்வு

செங்கோட்டை,செப்.9: செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட எஸ்பி சாம்சன், துணை இயக்குனர் முரளி சங்கர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஆய்வின் போது குழுவினர், ஆரம்ப சுகாதார நிலையத்தின் சேவைகள் திருப்திகரமாக இருப்பதாக கூறினர். இதனையடுத்து சுகாதார நிலையத்திற்கு தேவையானவை குறித்து கேட்டறிந்தனர். அதில் சுகாதார நிலையத்திற்கு 2 மருத்துவ அலுவலர், மருந்தாளுர் பணியிடங்களும், கூடுதல் நவீன ஆய்வக கட்டிடம், மருந்தக கட்டிடம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்செல்வி, மருத்துவ அலுவலர் மாரிச்செல்வி, சித்தமருத்துவ அலுவலர் தேவி, பல்மருத்துவ அலுவலர் இந்துமதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளா் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை