இறங்குமுகத்தில் தங்கம் விலை; 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.39,152-க்கு விற்பனை

சென்னை: 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து,ரூ.4,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக பெண்களை பொறுத்தவரை தங்களது முதலீடுகளை தங்கத்தில் செலுத்துவது வழக்கம். ஏனெனில்,அது புத்திசாலித்தனமான முதலீடாக பார்க்கப்படுகிறது.ஆனால்,தங்கம் விலையை பொறுத்தவரை, நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணமாக உள்ளது. இதனிடையே,ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரால் சர்வதேச அளவில் பொருளாதார ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றனர் இதனால் பங்குசந்தைகளும் கடும் வீழ்ச்சி கண்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக தங்கம் விலையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்,சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 அதிகரித்தும்,22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்தும் காணப்பட்டது. இந்நிலையில்,சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து,ரூ.4,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து,ஒரு சவரன் ரூ.39,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம்,சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.74.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து சவரன் ரூ.54,560-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,560-க்கு விற்பனை..!!

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை