இரைக்காக காத்திருக்கும் பறவைகள் சந்தன மர ஏரியாக்களில் கண்காணிப்பு கேமரா

 

கோவை, ஜூலை 17: கோவை வனத்தின் சில பகுதியில் சந்தன மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளது. வாளையார், இருட்டுப்பள்ளம், சிறுவாணி அடிவாரம், முள்ளங்காடு, பூண்டி, ஆனைகட்டி உட்பட குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே சந்தன மரங்கள் காணப்படுகிறது. கோவை குற்றாலம் செல்லும் வனப்பகுதியில் 1 ஏக்கரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் கொண்ட சிறு தோப்பு காணப்படுகிறது. கோவை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை வனசரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் சுமார் 20 ஆயிரம் சந்தன மரங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் வனப்பகுதியில் சந்தன மரங்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதற்கு சீதோஷ்ண நிலை மாற்றம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சந்தன மரங்கள் செம்மண்ணும், நீர்பிடிப்பும், குளிர்ந்த காற்றும் உள்ள இடங்களில் செழித்து வளர்ந்துள்ளது.  ஆர்.எஸ்.புரம் அரசு ஊழியர் குடியிருப்பு வளாகம், செல்வபுரம் மாநகராட்சி பூங்கா, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதியில் பல சந்தன மரங்கள் கட்டிங் மெஷின் மூலமாக வெட்டி கடத்தப்பட்டுள்ளது. சந்தன மர ெகாள்ளை அவ்வப்போது நடப்பதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மரங்களை எப்படி பாதுகாப்பது என தெரியாமல் தவிப்படைந்துள்ளனர். ஆர்.எஸ்.புரம் வனக்கல்லூரி வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் கம்பி வேலி பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் காந்திபார்க், பாரதிபார்க், செல்வபுரம் பார்க் உள்பட பல்வேறு மாநகராட்சி பூங்காக்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் எவ்வித பாதுகாப்பும் இல்லாத நிலையில் இருக்கிறது.

ரேஸ்கோர்ஸ் நடைபயிற்சி தளத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்தன மரங்களுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்படவில்லை. சமீபத்தில் நகரில் சில இடங்களில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது. இதில் சில குற்றவாளிகள் இன்னும் போலீசில் சிக்கவில்லை. சந்தன மர கடத்தல் கும்பலை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சந்தன மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமரா வைக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். குடியிருப்பு சங்கம், வணிக நிறுவனங்களிடம் போலீசார் கேமரா அமைக்க வலியுறுத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை