இயற்கை விவசாயம் செய்திட பசுந்தாள் விதை தக்க பூண்டு 50 சதவீத மானியத்தில் கிடைக்கும் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

தண்டராம்பட்டு, ஜூன் 19: இயற்கை விவசாயம் செய்திட பசுந்தாள் விதை தக்க பூண்டு 50 சதவீத மானியத்தில் கிடைக்கும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தண்டராம்பட்டு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராம்பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மண்வளத்தை பாதுகாக்க கூடிய பசுந்தால் உரங்கள் பயன்பாடு பற்றி விவசாயிகள் தெரிந்து கொண்டு விவசாயம் செய்ய வேண்டும். தக்கை பூண்டு, சணப்பை, வேலி மசால், குதிரை மசால், பயிறு வகைகள் ஒரு ஏக்கருக்கு 20 கிலோ வீதம் விதைக்க வேண்டும். விதைத்த 45 முதல் 50 வது நாட்களில் பூ பூக்கும் தருவாயில் செடிகளை மடக்கி உழவு செய்ய வேண்டும். இப்படி மடக்கி உழவு செய்வதால் மண்ணிற்கு அங்கக கரிமசத்து எளிதில் கிடைக்கும்.

இந்த பசுந்தால் பயிர்களை நிலத்தில் விதைத்து பயன்படுத்துவதால் மண்வளம் அதிகரிக்கும். மண்ணின் கலர் தன்மை முற்றிலும் மாறி மண் பொலபொலப்பு தன்மை ஏற்படும். மண் அமைப்பை மேம்படுத்தும் மண்ணில் காற்றோட்டம் ஏற்பட்டு நீர் பிடிப்பு கொள்ளளவை அதிகப்படுத்தும். மண்ணில் நுண்ணுயிர்கள் வேகமாக பெருகி மண்புழுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பை குறைக்கும் பசுந்தாள் பயிர் நன்செய் மற்றும் புன்செய் ஆகிய இருபயிருக்கும் உபயோகிக்கலாம். இவ்வாறு பசுந்தாள் உரங்களை பயன்படுத்தி மண்ணின் வளத்தை பாதுகாத்து இயற்கை விவசாயம் செய்திடவும் தண்டராம்பட்டு வேளாண்மை விரிவாக்க மையத்தில் பசுந்தாள் விதை தக்க பூண்டு 50 சதவிகித மானியத்தில் கிடைக்கும் தேவைப்படும் விவசாயிகள் தங்களது சிட்டா ஆதார் ஆகியவை கொண்டு வந்து தக்க பூண்டு விதையை பெற்றுக்

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்