இயற்கையோடு இணைவோம்…மண் சிகிச்சை!

நன்றி குங்குமம் டாக்டர் நிலம் எனும் நல்லாள் நாம் சிறந்து வாழ பல நல்ல மருந்துகளையும் சிகிச்சைகளையும் கொண்டுள்ளாள். அதில் ஒன்றுதான் மண் சிகிச்சை. மண் சிகிச்சை முறை மிகவும் எளிமையானது. நிலத்தில் 3 முதல் 4 அடி ஆழத்தில் தோண்டி மண் எடுத்துக்கொள்ளவேண்டும். இதில் கற்கள், துண்டுகள், ரசாயன கலவைகள் கண்டிப்பாக இருக்கக்கூடாது. இயற்கையின் பஞ்ச பூத சக்திகளில் மண் ஒன்று ஆகும். இது உடல் ஆரோக்கியத்துக்கும், நோய்களை குணப்படுத்தவும் துணைசெய்யும்.இயற்கையின் ஐந்து கூறுகளில் மண்ணும் ஒன்று. இது நலம் தருவதிலும் மிக உயர்ந்த நன்மையை ஏற்படுத்தவல்லது. சிகிச்சைக்கு மண்ணை உபயோகப்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள் சூரிய ஒளியில் உள்ள சக்திகளை உடலுக்கு பெறச்செய்கிறது. குளிர்ந்த மண்ணை உடலில் தடவி வெகு நேரம் உலராமல் இருப்பதன் மூலம் உடலின் வெப்பம் தணிந்து உடல் சம நிலை அடைகிறது. உடலில் பூசிய மண்ணுடன் நீரையும் சேர்ப்பதால் தேவையான அடர்த்தியும் , உருவமும் எளிதாக கிடைக்கிறது. மலிவானது எளிதாக கிடைக்கக் கூடியது. மண் சிகிச்சைக்கு தயார் செய்யும் முன்பே மண்ணை உலர வைத்து, கற்கள், மண்ணில் கலந்துள்ள இதர பொருட்களை பிரித்து விட்டு பயன்படுத்த வேண்டும்.உபயோகிக்கும் முறைசலித்த, மெல்லிய மண்ணை ஈரமான துணியில் நோயாளியின் வயிற்று அளவுக்கு ஏற்றவாறு கட்டி, செங்கல் வடிவ அளவில் நோயாளியின் வயிற்றின் மேல் வைக்க வேண்டும். குளிர்ந்த காற்று வீசினால் குளிர்ந்த காற்று படாதவாறு மேலே போர்த்த வேண்டும்.மண்கட்டியின் பயன்கள்மண்கட்டியினை அடிவயிற்றில் பயன்படுத்தும் பொழுது ஜீரணகோளாறுகளை போக்குகிறது. உடல் சூட்டை குறைக்கிறது. மொத்தமாக தயாரிக்கப்பட்ட மண்கட்டிகளை தலையில் வைத்து பயன்படுத்தும்பொழுது அதிகப்படியான தலைவலியும் உடனடியாக சரிசெய்கிறது. இதை கண்கள் மீது பயன்படுத்தும் பொழுது கண் மற்றும் பார்வை பிரச்சனைகளான இமைப்படல அழற்சி, கண்விழி அரிப்பு, ஒவ்வாமை, கண்விழி அழுத்தம், கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை முதலிய பிரச்சனைகளை சரிசெய்கிறது.முகத்துக்குப் பயன்படுத்துதல்சுத்தம் செய்யப்பட்ட மண் 30 நிமிடங்களுக்கு வைத்திருப்பதனால் தோல்நிறம் அதிகரிக்கிறது. கடும்புள்ளிகள், சிறுசிறு பொத்தல்கள் ஆகியவை சரிசெய்யப்படுகின்றன. மேலும், இது கண்களுக்குக் கீழ் உள்ள கருவளையங்களை சரிசெய்வதற்கும் பயன்படுகிறது. 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.மண் குளியல்நோயாளி அமர்ந்த நிலையிலோ அல்லது படுத்திருக்கும் நிலையிலோ மண்ணை பூச வேண்டும். இது தோலில் இரத்த சுழற்சியும் வலிமையையும் அளிக்கின்றது. மண் குளியலின் போது நோயாளிக்கு சளிபிடிக்காதவாறு கவனமாக கடைபிடிக்கவேண்டும். நோயாளியின் குளிர்ந்த நீரால் நோயாளியின் உடல் முழுதும் தெளிக்க வேண்டும். நோயாளி மிகவும் குளிர்ச்சியாக உணர்ந்தால் சுடுநீர் பயன்படுத்தலாம், உடனடியாக நோயாளியின் உடலினை துவட்டி உஷ்ணப்படுத்திக்கொள்ளவேண்டும். 45 முதல் 60 நிமிடங்கள் வரை மண் குளியல் செய்யலாம்.மண்குளியலின் பயன்கள்உடல் மற்றும் தோல் காயங்களை சரிசெய்வதில் மண்குளியல் சிறந்தபலனை தருகிறது.உடலிற்கு குளிர்ச்சியூட்ட பயன்படுகிறது. உடலில் உள்ள விஷத்தன்மையை நீர்க்கச்செய்து, உறிஞ்சி வெளியே எடுத்து விடுகிறது. பசியின்மை, மனஉளைச்சலினால் ஏற்படும் தலைவலி, அதிக இரத்த அழுத்தம், தோல் நோய்கள் முதலியவற்றிற்கு சிறந்தமுறையில் சிகிச்சை பயன்படுகிறது. மலச்சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு காந்திஜி மண்குளியலையே  பயன்படுத்தினார்.தொகுப்பு : சரஸ்

Related posts

ஹெட்போன், இயர்போன் எச்சரிக்கை!

மஞ்சள் இயற்கை 360°

அதிகரிக்கும் லேட் நைட் உணவுகள்… காத்திருக்கும் ஆபத்துகள்!