இமாசல பிரதேசத்தில் ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலின் நான்காவது ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்

உனா: இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இது நாட்டின் அதிவேக ரயிலாக உள்ளது. இது சுமார் 160 கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த ரயில் சேவை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. வந்தே பாரத்தின் 3-வது ரயில் சேவை குஜராத் மாநிலம், காந்தி நகருக்கும், மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கும் இடையில் தொடங்கப்பட்டது. இந்த ரயில் சேவை கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் 4-வது ரயில் சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இது இமாசல பிரதேச மாநிலம் உனா ரயில் நிலையத்திலிருந்து டெல்லி இடையே இயக்கப்படுகிறது. நாட்டின் 4-வது வந்தே பாரத் எக்பிரஸ் ரயிலை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்து. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இமாச்சல பிரதேசம் மற்றும் உனாவுக்கு தீபாவளி பண்டிகை முன்னரே வந்துவிட்டது. நான் இன்று புதிய வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளேன். நாட்டில் அறிமுகம் செய்யப்படும் 4-வது வந்தே பாரத் ரெயில் இதுவாகும். கிராமப்புற சாலைவழி மேம்பாடு, அனைவருக்கும் குடிநீர் வினியோகம் கிடைக்க செய்தல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பில் முன்னேற்றத்துடன் கூடிய சுகாதாரநலன் சார்ந்த வசதிகள் ஆகியவை அரசின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் ஆகும். புதிய இந்தியாவானது, கடந்த கால சவால்களை மேற்கொண்டு கடந்து, விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்….

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!