இன்று முதல் 3 நாட்கள்அமைச்சர் கீதாஜீவன்மக்கள் குறைகேட்பு

தூத்துக்குடி, ஏப். 7: தூத்துக்குடியில் இன்று முதல் 3 நாட்கள் அமைச்சர் கீதாஜீவன், பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், இன்று(7ம் தேதி) காலை 10.30 மணிக்கு தனது இல்லத்திலும், மாலை 5.30 மணிக்கு மாநகராட்சி 32வது வார்டு பகுதியிலும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். நாளை(8ம் தேதி) காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலும், மாலை 5.30 மணிக்கு மாநகராட்சி 18வது வார்டு பகுதியிலும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். 9ம் தேதி காலை 10.30 மணிக்கு சின்னமணி நகர் பூங்கா அருகில் ஆவின் பாலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு மாநகராட்சி 19வது வார்டு பகுதியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். இந்நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை