இன்று அதிகாலை 5 மணிக்கு வீரராகவர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் 59வது திவ்யதேசமான திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் இன்று அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியைக்காண வழக்கம்போல் ஏராளமான பக்தர்கள் குவிந்துவிடுவார்கள். இதனால் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க இந்தாண்டு அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை காண பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பூஜைகள் முடிந்த பின்னர் காலை 6.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்படுவர் என கோயில் கவுரவ ஏஜென்ட் சம்பத் தெரிவித்துள்ளார்….

Related posts

இரட்டைமலை சீனிவாசன் வகுத்த பாதை இந்தியாவில் வெற்றி பெறும் நிலை வந்துள்ளது: செல்வப்பெருந்தகை புகழாரம்

கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி வழக்கு குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி அஞ்சலி