இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை; சிறப்பு பிரிவினருக்கு 24ம் தேதி வரை கலந்தாய்வு: முதல்நாளில் 129 இடங்களை தேர்வு செய்த மாணவர்கள்

சென்னை: இன்ஜினியரிங் படிப்புக்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று முதல் 24ம் தேதி வரை ஆன்லைனில் கலந்தாய்வு நடக்கிறது. நேற்று நடந்த கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களில் 129 பேர் தங்களுக்கு பிடித்த இடங்கள் மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 20ம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான இன்ஜினியரிங் கலந்தாய்வு 20ம் தேதி தொடங்கி வரும் 24ம் தேதி வரை நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்தார். இந்தாண்டு இன்ஜினியரிங் படிக்க மாணவர்கள் சுமார்  1.60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இது கடந்த ஆண்டை விட அதிகம்.அதன்படி, இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்வதற்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. சிறப்பு பிரிவில் வரும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த  கலந்தாய்வு ஆன்லைன் மூலம் அதற்காக அமைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பல்வேறு மையங்களில் நடந்தது.முதல் நாளான நேற்று தொடங்கிய கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளி, விளையாட்டுப் பிரிவு, முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் ஆகிய சிறப்பு பிரிவில் விண்ணப்பித்திருந்தவர்களுக்கு காலை முதல் ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நடந்து முடிந்தது. இந்த கலந்தாய்வுக்கு மொத்தம் 129 பேர் பாடப்பிரிவுகளையும், தங்களுக்கு பிடித்த கல்லூரிகள் மற்றும் இடங்களை தேர்வு செய்தனர். இந்த கலந்தாய்வு வரும் 24ம் தேதி முடிகிறது. இதை தொடர்ந்து வரும் 25ம் தேதி முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு துவங்குகிறது. இதில் சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை