இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 539 திருக்கோயில்களில் இன்று முதல் தூய்மை பணிகள்: ஆணையர் குமரகுருபரன் தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கை: 539 திருக்கோயில்களில் தூய்மை பணிகள் (மாஸ் கிளீனிங்) நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும். பழநி, சமயபுரம் திருக்கோயில், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், திருவேற்காடு அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில் உள்பட 539 திருக்கோயில்களில் உள்ள பிராகாரம், நந்தவனம், திருக்குளம், தண்ணீர் தொட்டி, மதில் சுவர், விமானங்களில் உள்ள செடிகள் அகற்றும் பணிகள், தரைதளம், மண்டபம், தூண்கள் தண்ணீர் பீச்சி அடித்து சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், பூஜை சமான்கள் சுத்தம் செய்தல் ஆகியவை மாஸ் கிளினிங் மூலம் திருக்கோயில்களில் ஒப்பந்த பணியாளர்கள், உழவாரப் பணியாளர்கள், திருக்கோயில் பணியாளர்களைக் கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்