இந்து அறநிலையத்துறை அறிப்பு பலகை பொதுமக்கள் அப்புறப்படுத்தி, அதிகாரிகளுடன் வாக்குவாதம்

 

கரூர், செப். 18: கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் நிலங்களில் இந்து அறநிலையத்துறை எச்சரிக்கை பலகை வைத்ததற்கு, எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் பலகையை பிடுங்கி எறிந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் புகழ் வாய்நந்த பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலை சுற்றிலும் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அதிகளவு உள்ளதா கூறப்படுகிறது.

இந்நிலையில், வெண்ணைமலை பகுதி காதப்பாறை பஞசாயத்து பகுதியில் உள்ள சில இடங்களில் இந்து அறநிலையத்துறை சார்பில் கோயிலுக்கு சொந்தமான இடம் என எழுதிய பலகை வைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த பகுதியை சேர்ந்த சிலர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இருதரப்பினர்களையும் சமாதானப்படுத்தி அந்த பகுதியில் இருந்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக இந்த பகுதியில் நேற்று மதியம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்