இந்திய வம்சா வழியைச் சேர்ந்த 30 ஆயிரம் மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க கோரிக்கை

சென்னை:
மலையக-தாயகம் திரும்பியோருக்கான இயக்கம் சார்பில் நேற்று சென்னையில்
பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர் கந்தையா,
மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன், என்சிஎச்ஆர்ஓ தேசிய
தலைவர் பேராசிரியர் மார்க்ஸ், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள்
குழந்தைசாமி, இளம்பரிதி, இளந்தமிழகம் மற்றும் மறுவாழ்வு முகாம்களை சேர்ந்த
பிரநிதிகள் செந்தில் ஆகியோர் கலந்து ெகாண்டனர். குடியுரிமை
கோருவோரில் இந்திய வம்சா வழியைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் தமிழர்களுக்கு
தமிழ்நாட்டில் உள்ள முகாம்களிலும் முகாம்களுக்கு வெளியேயும் வாழும் இலங்கை
தமிழ் ஏதிலிகள் சட்டவிரோத குடியேறிகள் அல்லர் என்றும் அதில் உள்ள இந்திய
வம்சாவழித் தமிழர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்குமாறும்
ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற
வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். …

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு