இந்திய கதைகளை உலகம் முழுவதும் சொல்ல வேண்டும்: ராஜமவுலி ஆர்வம்

ஐதராபாத்: இதுவரை மகாபாரத கதைகள் பல திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளன. அதில் மகாபாரதத்தின் ஒரு பகுதி அல்லது ஒரு கேரக்டர் பற்றி சொல்லப்பட்டு இருக்கும். தற்போது முழு மகாபாரதத்தையும் படமாக்கும் முயற்சிகள் பல்வேறு தரப்பிலும் நடந்து வருகிறது.   ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’ ஆகிய பான் இந்தியா படங்களின் மூலமாக  இந்திய திரையுலகினர் கவனத்தை ஈர்த் துள்ள இயக்கு னர் எஸ்.எஸ்.ராஜமவுலி, முழு மகாபாரத கதையையும் இயக்க வேண்டும் என்று பலபேர் கருத்து ெதரிவித்துள்ளனர். இதுகுறித்து ராஜமவுலியும் பல்வேறு பேட்டிகளில், ‘மகாபாரதம் எனது மிகப்பெரிய கனவுப் படமாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.மேலும் இதுகுறித்து பேசியுள்ள ராஜமவுலி, ‘இந்தியாவில் இருக்கும் பல கதைகளை உலகம் முழுவதும் கொண்டு சொல்ல வேண்டும் என்பது எனது எண்ணம். அந்தக் கதைகளை மிகப் பிரமாண்டமாகவும், திரையில் சிறப்பாகவும் உருவாக்க வேண்டும் என்பது என் திட்டம். முழு மகாபாரதக் கதையையும் படமாக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாகும். இப்படத்தை நான் தொடங்குவதற்கு முன்பு மூன்று அல்லது நான்கு படங்களை இயக்கி முடிக்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். மகாபாரதத்தை 3 பாகங்களாக உருவாக்க ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. அந்தப் படத்தை ராஜமவுலி இயக்க ஆரம்பித்தால், சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்களும் தயாராக இருக்கின்றன. தற்போது மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கும் பான் இந்தியா படத்தை இயக்கும் பணிகளில் ராஜமவுலி ஈடுபட்டுள்ளார். அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது….

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சொத்துகள் பாதுகாப்பாக உள்ளதா?: பவன் கல்யாண் கேள்வி!!

இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என விமர்சனம் : பகிரங்க மன்னிப்பு கோரினார் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி !!

இஸ்லாமியர்கள் பற்றி சர்ச்சை கருத்து: பகிரங்க மன்னிப்பு கோரினார் கர்நாடக ஐகோர்ட் நீதிபதி