இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறிய சீனா!: எல்லையில் மீண்டும் படைகள் குவிப்பு..!!

டெல்லி: இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி எல்லையோர பகுதிகளில் சீனா மீண்டும் படைகளை குவிப்பது அம்பலமாகியுள்ளது. இந்திய எல்லைக்குள் ஊடுருவி தங்களின் கொடிகளை நிறுத்தி அதனை தங்கள் பகுதி என்று வம்பிழுப்பது சீனாவின் வாடிக்கையாகவே மாறி வருகிறது. இதனால் சமீபகாலமாக இந்திய – சீன உறவுகள் மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு  லடாக் பகுதியில் அத்துமீற முயன்ற சீன படையினரை இந்திய ராணுவத்தினர் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது. இதில் 20க்கும் அதிகமான இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தமது இழப்பை இந்தியா வெளிப்படைத் தன்மையுடன் அறிவித்தது. ஆனால் சீன தரப்பில் இழப்புகள் பற்றி எதுவும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இந்த மோதல் காரணமாக இருநாடுகள் இடையே பதற்றமான சூழல் உருவானது. அடுத்தடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மூலம் பதற்றம் சற்று தணிந்தது. பேச்சுவார்த்தைகளின் போது எல்லையோர பகுதிகளில் இருந்து இரு நாடுகளும் படைகளை விலக்கி கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் 17 மாதங்களுக்கு பிறகு இந்திய எல்லையை ஒட்டியுள்ள சீன பகுதிகளில் வீரர்கள் தங்குவதற்கான கட்டமைப்புகளை அந்நாட்டு ராணுவம் உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. மேலும் எல்லை ஒட்டிய பகுதிகளில் விமானங்கள் தரையிறங்குவதற்கான கட்டமைப்புகளை அதிகரிக்கவும் சீன ராணுவம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. சீனாவின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக கவனித்து வரும் இந்தியா பதிலுக்கு தனது படைகளை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது….

Related posts

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி: அதிபர் பைடனுடன் பேச்சுவார்த்தை

இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் லெபனானில் பலி 37 ஆக அதிகரிப்பு: ஹிஸ்புல்லா கமாண்டர்கள் 2 பேர் சாவு

அமைதியாக முடிந்தது தேர்தல்; இலங்கையின் புதிய அதிபர் யார்? அதிகாலையில் முடிவுகள் அறிவிப்பு