இந்தியாவில் கணிசமாக உயரும் பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 10,929 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 392 பேர் பலி

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,60,265 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 10,929 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,44,683 ஆக உயர்ந்தது.* புதிதாக 392 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,60,265 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 12,509 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 37,37,468 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,46,950 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* நேற்று 20,75,942 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.* இந்தியாவில் இதுவரை 1,07,92,19,546 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.* கொரோனவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.23%; உயிரிழப்பு விகிதம் 1.34% ஆக உள்ளது. …

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு