இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 837 பேருக்கு கொரோனா; 6 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 837 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 837 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,64,810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.புதிதாக தொற்றால் 6 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5,30,520 ஆக உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 4,41,21,538 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 12,752 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 2,19,77,93,278 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,38,075 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது….

Related posts

இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவு முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.9.78 லட்சம் கோடி இழப்பு

சாவர்க்கர் மாட்டிறைச்சி சாப்பிட்டவர்: கர்நாடக அமைச்சர் தினேஷ்குண்டுராவ் பேச்சு

நவராத்திரி விழாவை முன்னிட்டு உச்ச நீதிமன்ற கேண்டீனில் அசைவத்திற்கு தடை: வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு