இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4,209 பேர் பலி…மோசமாகிறது நிலைமை… உச்சகட்ட பீதியில் மக்கள்!!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4,209 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக  2,59,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.* இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,60,31,991 ஆக உயர்ந்தது.* புதிதாக 4,209  பேர் உயிரிழந்துள்ளனர்.* இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை  2,91,331 ஆக உயர்ந்துள்ளது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,57,295 பேர் குணமடைந்துள்ளனர்.* இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,27,12,735 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 30,27,925  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* இதன் மூலம், நாட்டின் இதுவரை 19,18,79,503 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது….

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

மதகலவரத்தை தூண்ட முயற்சி பவன் கல்யாண் மீது மதுரை போலீசில் புகார்

திருப்பதியில் வேதமந்திரங்கள் முழங்க ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது