இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4,000ஐ தாண்டியது.. 10 பேர் பலி : ஒன்றிய சுகாதாரத்துறை

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 4, 041 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,68,585 ஆக உயர்ந்தது.* புதிதாக 10 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,651 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,363 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,22,757 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.05% ஆக குறைந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 21,177 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.*இந்தியாவில் 1,93,83,72,365 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 12,05,840 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது….

Related posts

நில முறைகேடு வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம்; சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்கு: முதல்வர் பதவிக்கு ஆபத்து

கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவையுங்கள் திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுவதா..? முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

பிரபல மலையாள சினிமா டைரக்டர் பாலச்சந்திர மேனன் மீது நடிகை பலாத்கார புகார்: குரூப் செக்சுக்கும் கட்டாயப்படுத்தினார்