இந்தாண்டு 3 லட்சம் கண் சிகிச்சை செய்ய இலக்கு தற்போது வரை ஒரு லட்சம் சிகிச்சை நடைபெற்றுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில்,   சென்னை லயன்ஸ் கண் வங்கி ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கண் பரிசோதனை உபகரணங்களை வழங்கியதை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று  துவக்கி வைத்தார். பின்னர், கண் தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை செய்யும் வகையில் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து 3.5 லட்சம் கண் கண்ணாடிகள் மாணவர்களுக்கு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 1653 ஜோடி கண்கள் தானமாக அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு 3 லட்சம் கண் சிகிச்சைகள் நடைபெற  இலக்காக இருந்த நிலையில்  தற்போது வரை 1,43,073 சிகிச்சைகள் நடைப்பெற்றுள்ளது.தமிழக அரசு தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தை சிறப்பாக  எடுத்து நடத்தியதில் இந்தியாவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. லயன்ஸ் அமைப்பின் சார்பாக இது வரை 25000 நபர்கள் கண் தானம் பெற்றப்பட்டுள்ளது. சித்த மருத்துவ பள்ளிகள் தொடங்கியவுடன் நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அறிவித்ததை அடுத்து 1400 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டது. மேலும் 9 பேர் அரசு மருத்துவமனையிலும் 326 பேர் தனியார் மருத்துவமனையிலும் 109 பேர் வீடுகளில் என மொத்தமாக 444 பேர் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு