இந்தத் தீபாவளிப் பட்டாசை விதைக்கலாம்!

தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்புகள், விளக்குகள், இவைகளை எல்லாம் கடந்து மனதில் நிற்பது பட்டாசுகள்தான். அப்படிப்பட்ட பட்டாசுகளை வெடிக்காமல் விதைத்தால் எப்படி இருக்கும். அதைத்தான் தனித்துவமான அன்பளிப்புப் பெட்டிகளில் தயார் செய்கிறார் ஷில்பாஞ்சனி தான்து. இளம் வயதிலேயே சிறப்பான தொழில் முனைவோராக உருவாகியிருக்கிறார் ஷில்பாஞ்சனி. சென்னையில் கல்லூரிப் படிப்பை முடித்த ஷில்பாவுக்கு சொந்த ஊர் விசாகப்பட்டினம். படித்து முடித்து ஐடி, மார்கெட்டிங் என வேலையில் சேர்ந்தவருக்கு பெரிதாக அதில் நாட்டமில்லை. எனவே வேலையை விட்டுவிட்டேன் என்கிறார்.‘இன்னொருத்தர் கிட்ட வேலை செய்கிற எந்த வேலையிலேயும் எனக்கு ஆர்வமே வரலை. அப்போதான் ஒரு பத்திரிகை ஆரம்பிக்கலாம்னு நினைச்சு ஆரம்பிச்சேன். அதுக்கு நல்ல வரவேற்புக் கிடைச்சது. தொடர்ந்து எங்களுடைய புத்தக டிசைன்கள் பார்த்துட்டு ஏன் நீங்க இந்த கம்பெனி லோகோக்கள், புரோச்சர்கள் செய்யக் கூடாதுன்னு கேட்டாங்க. அப்படியே அதைத் துவங்கினோம். இன்னும் எதாவது ஸ்பெஷலா செய்யணும்னு தோணுச்சு’ என்னும் ஷில்பாவுக்கு மறுசுழற்சி, மற்றும் ஆர்கானிக் அன்பளிப்புகள் மேலே ஆர்வம் சென்றிருக்கிறது. ‘ஹேண்ட்கிராஃப்ட் விளக்குகள், அரோமா மெழுகுவர்த்திகள், அலங்காரப் பொருட்கள் எல்லாம் சேர்த்து கிஃப்ட் பாக்ஸஸ்களா ஏன் ஆன்லைன் விற்பனை செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. அப்படித்தான் இகோபாக்ஸா (EcoBaxa) கான்செப்ட் கொண்டு வந்தோம். அதாவது பாக்ஸ் முதல் உள்ளே வைக்கும் புராடெக்ட்கள் உட்பட அத்தனையும் ஆர்கானிக். சூழலுக்கு நண்பனான புராடெக்ட்கள் என்னென்ன இருக்கோ அத்தனையும் நானே உருவாக்கி அன்பளிப்பு பாக்ஸ்கள் விற்பனைக்குக் கொண்டு வந்தேன். அப்போதான் கிமிரிக்கா அப்படிங்கற கிஃப்ட் ஆன்லைன் டீம் விதைகள் கொண்ட பட்டாசுகளை விற்பனை செய்யறது தெரிஞ்சது. அவங்க கிட்டே வாங்கி என் கிஃப்ட்கள் கூட இணைச்சேன்’ என்னும் ஷில்பா இந்த விதைகள் நிறைந்த பட்டாசுகள் குறித்து விளக்கத் துவங்கினார். ‘பலரும் இந்தப் பட்டாசுகளை பத்த வைக்கணுமா? வெடிச்சு விதைகள் சிதறுமா? இப்படி நிறைய சந்தேகங்கள் கேட்கறாங்க. ஆக்சுவலி இந்தக் கான்செப்ட் வெறும் பட்டாசு ஸ்டைல் பேக்கிங்கில் வரும் விதைகள்தான் இதனுடைய கான்செப்ட். உதாரணத்துக்கு சரவெடி வாங்கினால் அதன் சிவப்பு நிற உடல் பகுதி முழுக்க கீரை, தோட்டக் காய்கறிகள், மலர்கள் , இன்னும் சில செடிகளின் விதைகள் நிரப்பி இருப்பாங்க. இந்த வெடிகளை அப்படியே ஒரு டப்பா தண்ணீரில் போட்டு எடுத்து மண்ணிலே விதைச்சாலே போதும். முளைவிடுகிற நேரத்திலே காகிதங்களை நீங்க அப்புறப் படுத்திடலாம். குழந்தைகளுக்கு செடிகள், தாவரங்களின் அருமைகளைச் சொல்லிக் கொடுக்கணும். அதை இப்படியும் செய்யலாம். அவங்களுக்குப் பிடிச்ச பேக்கிங்ல விதைகள் வரும்போது இயற்கைக் குறித்த முக்கியத்துவத்தை அவங்களுக்குப் பிடிச்ச பொருட் களின் மூலமா உணர்த்தலாம் என்கிற சின்ன ஐடியாதான் இந்த விதைகள் பட்டாசுகள்’ என்னும் ஷில்பா சீசனுக்கு ஏற்றாற் போல் அவ்வப்போது தேவைப்படும் பொருட்கள் அத்தனையும் தானே செய்து கிஃப்ட் ஹேம்பர்கள் தயார் செய்கிறார்.‘என்னுடைய கிஃப்ட் பாக்ஸ்கள்ல எனக்கே பிடிச்ச விஷயம்னா அது பழங்குடி மக்கள் கூட சேர்ந்து நாங்க செய்கிற மர பொம்மைகள்தான். ‘குலாப் டிரைப்ஸ்’ அப்படின்னு இதுக்கு பெயர் வெச்சிருக்கேன். இதிலே பயன்படுத்துகிற கலர்கள் கூட தாவர அடிப்படையிலான இயற்கை நிறங்கள்தான். அந்த பழங்குடி மக்களையும் ஒண்ணு சேர்த்து இன்னும் நிறைய கைவினை அலங்காரப் பொருட்கள் மேக்கிங் எல்லாம் செய்துட்டு இருக்கேன்’ தன்னம்பிக்கை மின்ன பேசி முடித்தார் ஷில்பாஞ்சனி தான்து.தொகுப்பு : ஷாலினி நியூட்டன்     தித்திப்பான டிப்ஸ்!பீட்ரூட் அல்வா, பீட்ரூட் திரட்டுப்பால் செய்யும்போது பீட்ரூட்டின் சிவப்பு நிறம் மாறாமலிருக்க. அதை வினிகரில் முக்கி எடுத்து அந்த நீரை வடிகட்டிய பின்பு நறுக்க வேண்டும்….

Related posts

கூட்டுறவு செயலி!

கடன் வாங்கும் முன் கவனியுங்கள்!

ஆரோக்கியம் அள்ளிக் கொடுக்கும் ABC ஜூஸ்!