இத்தாலி பிரதமராக மெலோனி தேர்வு

ரோம்: இத்தாலியில் வலது சாரி கட்சியை சேர்ந்த ஜார்ஜியா மெலோனி தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவியேற்க உள்ளார். இத்தாலியின் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து பிரதமர் மரியோ டிராகி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், இதுவரை எண்ணப்பட்ட 63 சதவீத வாக்குகளில் ஜார்ஜியா மெலோனியின் வலதுசாரி கட்சியான பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சி 26 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான, மேத்யூ சால்வினி தலைமையிலான லீக் கட்சி 9 சதவீதம், சில்வியோ பெர்லுஸ்கோனி தலைமையிலான போர்ஜா இத்தாலியா கட்சி 8 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன. தீவிர வலதுசாரி தலைவரான ஜார்ஜியா மெலோனியின் கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றி உள்ளதால், அவர் இத்தாலியின் முதல் பெண் பிரதமாக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது….

Related posts

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

இன்று ஓட்டுப்பதிவு இலங்கை புதிய அதிபர் யார்? 39 வேட்பாளர்கள் போட்டி