ஆவடியில் திமுக அமைப்பு தேர்தலையொட்டி வேட்பு மனுக்கள் விநியோகம்: அமைச்சர் பங்கேற்பு

ஆவடி: ஆவடி 15வது திமுக அமைப்பு தேர்தலை முன்னிட்டு,  வேட்பு மனுக்கள் விநியோகம் திருமலை ராஜபுரத்தில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பால்வளத் துறை அமைச்சர் ஆவடிசா.மு.நாசர் கலந்துகொண்டார். திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவடி மேற்கு, ஆவடி கிழக்கு, ஆவடி வடக்கு, ஆவடி தெற்கு பகுதிகளில் 15வது தி.மு.க அமைப்பு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான   வேட்பு மனுக்கள் விநியோகம்  நேற்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர்  தலைமை தாங்கினார். பின்னர், அவர் பேசுகையில், ‘‘ தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் மற்றும் தலைமை கழக பிரதிநிதி எஸ்.ஆஸ்டினிடம் வேட்பு மனுக்களை பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களை உரிய கட்டணத்துடன் இன்று முதல் வரும் 24ம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் ஆணையரிடம் வழங்க வேண்டும்.’’ என அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளான ஆவடி கிழக்கு பொறுப்பாளர் பேபி சேகர், ஜி.ராஜேந்திரன், பொன்.விஜயகுமார், ஜி.நாராயண பிரசாத் கலந்துகொண்டு விருப்ப மனுவை பெற்று கொண்டனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்