ஆலத்தூர் தாலுகா கொட்டரை கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

 

பாடாலூர், நவ.18: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொட்டரை கிராமத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மண்டல இணை இயக்குனர் டாக்டர். சுரேஷ் கிறிஸ்டோபர் அறிவுறுத்தலின்படி கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.

முகாமில் கூத்தூர் கால்நடை உதவி மருத்துவர் செல்வகுமார், கால்நடை ஆய்வாளர்கள் வசந்தா, பிரபு மற்றும் உதவியாளர்கள் ஆகியோர் முகாமில் 600 மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். முகாமில் கொட்டரை மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து தடுப்பூசி போட்டனர். மேலும் 800 க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை