ஆலத்தூர் தாலுகாவில் குளிர்வித்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

 

பாடாலூர், அக. 5: ஆலத்தூர் தாலுகாவில் நேற்று நல்லமழை பெய்ததால் குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியதால் பொதுமக்கள் நிம்மதியுடன் தூங்கினர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் காலை வெயில் சுட்டெரித்தது. மாலை முதல் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இரவு பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் மழை நீடித்தது.

மேலும் பாடாலூர், திருவளக்குறிச்சி, இரூர், தெரணி, காரை, புதுக்குறிச்சி, கொளக்காநத்தம், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், மருதடி, விஜயகோபாலபுரம், நாட்டார்மங்கலம், செட்டிகுளம் உள்ளிட்ட பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. மழை நீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. மேலும் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்கினர். இதனால் குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழை சின்ன வெங்காயம் சாகுபடிக்கு ஏற்றதாகும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை