கடையம், ஜூலை 25: ஆழ்வார்குறிச்சி மற்றும் செட்டிகுளம் பகுதியில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.12 லட்சம் வீதம் ரூ.24 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டன. இதன் திறப்பு விழாவில் ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி தலைவி சரசு, ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் கணபதி, ஒன்றிய செயலாளர் இளங்கோ,மாவட்ட பொருளாளர் நூருல் அமீர், ஆழ்வார்குறிச்சி பேரூர் கழக செயலாளர் சைலப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம், ெசட்டிகுளம் பகுதியில் புதிய அங்கன்வாடி மையங்கள் திறப்பு விழா
previous post