ஆலங்குடி பகுதியில் விதிகளை மீறி ஏர்ஹாரன் பயன்படுத்திய வாகன ஓட்டுனரின் காதில் ஹாரன் ஒலிக்க செய்து எச்சரிக்கை

திருமயம்:ஆலங்குடி பகுதியில் விதிகளை மீறி ஏர்ஹாரன் பயன்படுத்திய வாகனத்தைப் பிடித்து ஓட்டுனர் காதில் அதிகாரிகள் ஹாரன் ஒலிக்கச் செய்து எச்சரித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் நூற்றுக்கணக்கான வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள் உள்ளன. இதனால் ஆலங்குடியில் கடைவீதி பகுதியில் காலை, மாலை நேரங்கள் அதிக அளவு மக்கள் கூட்டமாக நடமாடுவதை காண முடிகிறது. இதற்கு ஏற்றார் போல் வாகன போக்குவரத்தும் அதிகம் இருக்கும் நிலையில் மக்கள் கூட்டத்தில் வாகனங்கள் செல்லும் போது ஹாரன் ஒலி எழுப்பப்படுகிறது. அவ்வாறு கனரக வாகனங்களால் எழுப்பப்படும் ஒலியானது சாலையில் வாகனத்தில் செல்வோர் மட்டுமல்லாது அப்பகுதியில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் நடந்து செல்வோர் என அனைவர் காதுகளையும் ஒலி அதிரசெய்கிறது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை