ஆற்று பாலத்தில் தடுப்புச்சுவர் சேதம்-வத்திராயிருப்பு அருகே விபத்து அபாயம்

வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இருந்து மழைக்காலங்களில் பெய்யக்கூடிய மழைநீர் கல்லணை ஆற்று பாலத்தின் வழியாக ஆலங்குளம் கண்மாய்க்கு செல்கிறது. சதுரகிரியில் திடீர் மழையோ, வெள்ளப்பெருக்கோ ஏற்பட்டால் அளவுக்கதிகமான தண்ணீர் வரும்போது கல்லணை ஆற்றுக்கு மேலே தண்ணீர் பாய்ந்தோடி செல்லும்.ஆனால், இந்தப் பாலம் ஏற்கனவே உயரம் குறைவாக உள்ளது. இதனால் தண்ணீர் அதிகமாக வரும் போது தண்ணீர் பாலத்தின் வழியே செல்லாமல் அந்தப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து விடும். தற்போது உள்ள பாலத்தில் தடுப்பு சுவர்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சேதமடைந்த தடுப்புச் சுவர்களை கட்டுவதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு..!!

காந்தி மண்டபம் பராமரிக்கப்படவில்லை என ஆளுநர் கூறும் குற்றச்சாட்டு தவறானது: அமைச்சர் ரகுபதி

கீழடி ஊராட்சி தலைவருக்கு சு.வெங்கடேசன் வாழ்த்து..!!