ஆற்று நீரில் பொதுமக்கள் ஆபத்தான பயணம்-மணிமுக்தாற்றில் பாலம் அமைக்க வலியுறுத்தல்

வேப்பூர் : வேப்பூர் அடுத்த மேமாத்தூர் கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக மணிமுக்தாற்றின் ஆற்று வழிப்பாதையை கடந்து நல்லூர், வேப்பூர், விருத்தாசலம் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருவது வழக்கம். இந்த கிராம மக்கள் மற்றொரு வழியாக, இலங்கியனூர் பாலம் வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சேலம்-விருத்தாசலம் ரயில்வே சுரங்க பாதை வழியாக தான் மேமாத்தூர் கிராமத்திற்கு வரவேண்டும். மேமாத்தூர் கிராமத்திற்கு விருத்தாசலத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்து போதிய பாதை வசதி இல்லாததால் மேமாத்தூர் அணைக்கட்டு அருகே ஆற்றின் மறுகரையில் நிறுத்தப்படுகிறது. மேமாத்தூர் கிராம மக்கள் ஆற்றை கடந்து 1 கிலோ மீட்டர் தொலைவு நடந்துசென்ற பின்னரே பேருந்து ஏறக்கூடிய அவலநிலை நிலவி வருகிறது.இலங்கியனூர் பாலம் வழியாக வெகுதூரம் சுற்றி வரவேண்டும் என்பதால் மேமாத்தூர் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் மணிமுக்தாற்றை கடந்து செல்கின்றனர்.கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மணிமுக்தாற்றில் தண்ணீர் செல்வதால் அக்கிராம மக்கள் முழங்கால் அளவு தண்ணீரில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். மணிமுக்தாற்றின் குறுக்கே பாலம் அமைத்து தரக்கோரி இக்கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பருவ மழை காலங்களில் மணிமுக்தாற்றில் வெள்ள பெருக்கும், ரயில்வே சுரங்க பாலத்தில் தண்ணீர் சூழ்ந்து கொண்டால் மேமாத்தூர் கிராமம் தீவு போல காட்சியளிக்கும். இப்பகுதியில் மழை நீர் வடியும் வரை மேமாத்தூர் கிராம மக்கள் மருத்துவம் கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும், மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகுவர்.முதல்வருக்கு மனு அனுப்ப கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நீண்ட நாட்களாக தீர்வு காண முடியாமல் இருக்கின்ற பத்து பிரச்னைகள் குறித்து தெரிவிக்க ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.இந்நிலையில், விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கான பிரச்னைகளில் ஒன்றாக மேமாத்தூர் மணிமுக்தாற்றில் பாலம் அமைக்கும் கோரிக்கையை சேர்க்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்….

Related posts

45-வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 3 வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழகத்தில் 11 இடங்களில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை: பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஊக்கத்தொகை