ஆற்றில் சிக்கி உயிருக்கு போராடிய மனநலம் பாதித்த பெண் மீட்பு: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பொதுமக்கள் பாராட்டு

சென்னை: அடையார் ஆற்றில் சகதியில் சிக்கி உயிருக்கு போராடிய மனநலம் பாதித்த பெண்ணை சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டர் மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்தார். சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை தேடி நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணியளவில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை பின்புறம் உள்ள அடையார் ஆற்றின் சகதியில் அசைவு தெரிந்துள்ளது. இதை கவனித்த இன்ஸ்பெக்டர், சம்பவம் இடம் சென்று பார்த்தபோது, 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆற்றில் இறங்கியபோது சகதியில் சிக்கிய உயிருக்கு போராடியது தெரியவந்தது. உடனே இன்ஸ்பெக்டர் உடைந்த ஆஸ்பெட்டாஸ் ஓடுகளை சகதியில் போட்டு தனது உயிரை பொருப்படுத்தாமல் பெண்ணை உயிருடன் மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்தார். பின்னர் நடத்திய விசாரணையில், கிண்டி நாகி ரெட்டியாபட்டி தோட்டம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரின் தாய் என்று தெரியவந்தது. இவர் மனநலம் பாதிக்கப்பட்டு தன்னிலை தெரியாமல் ஆற்றின் சகதியில் சிக்கியது தெரியவந்தது. தொடர்ந்து அவரது மகன் ஆனந்தனை நேரில் வரவைத்து அவரது தாயை இன்ஸ்பெக்டர் அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டரின் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்