ஆற்றில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு-அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொன்னை  : பொன்னை ஆற்றில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னை ஊராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவமனை குடிநீர் தொட்டி அருகே ஆற்றில் கொட்டப்படும் குப்பைகளால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசி கொசு புழுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும், டெங்கு காய்ச்சல் பரவும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரும்  அவதிக்குள்ளாகின்றனர். இப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியின் அருகே கொட்டப்படும் குப்பை கழிவுகள், தண்ணீருடன் கலந்து குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.   எனவே நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் ஆற்றில் கொட்டப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை அப்பகுதியில் அமைத்து சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 4 சென்னை இளைஞர்களின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு: ஒருவரின் சடலத்தை தேடும் பணி தீவிரம்

ஆதிதிராவிடர் மாணவர் விடுதி விவகாரம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கயல்விழி பதிலடி

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது ஒன்றிய அரசு