ஆறுமுகநேரியில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

 

ஆறுமுகநேரி, ஜூலை 31: ஆறுமுகநேரியில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ரத்த அளவு, இசிஜி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை தரப்பட்டது. மேலும் முகாமில் டெங்கு, புகையிலை, சித்தமருத்தும், ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

மருத்துவமுகாமில் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள், திருச்செந்தூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள், மருந்தாளுநர்கள், வட்டார சுகாதார செவிலியர்கள், கிராம செவிலியர்கள், மக்களை தேடி மருத்துவ திட்ட பணியாளர்கள், ஊட்டச்சத்து பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாம் பணிகளை மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன் பார்வையிட்டார். இதற்கான ஏற்பாடுகளை காயாமொழி வட்டார மருத்துவ அலுவலர் ஹமீது ஹில்பி, ஆறுமுகநேரி மருத்துவ அலுவலர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

 

Related posts

திருமணமாகாத ஏக்கத்தில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை: திருவட்டார் அருகே சோகம்

ஆற்றூரில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கொல்லங்கோடு அருகே பெட்டிக்கடையில் 25 பாக்கெட் புகையிலை பறிமுதல்