ஆம்பூர் அருகே மலைக்காட்டில் விஷமிகள் வைத்த தீயால் எரிந்த மரங்கள்

ஆம்பூர்:  ஆம்பூர் அருகே மலைக்காட்டில் விஷமிகள் வைத்த தீயால் பல்வேறு மரங்கள் எரிந்தன. ஆம்பூர் மற்றும் ஒடுகத்தூர் வன சரகத்தில் பல்வேறு காப்பு காடுகள் உள்ளன. இதில் ஆம்பூர் அடுத்த தோட்டாளம் அருகே இரு வன சரக எல்லை பகுதிகள் உள்ளன.  இந்நிலையில், நேற்று முன்தினம் தோட்டாளம் அருகே உள்ள மலைகாட்டில் விஷமிகள் சிலர் தீ வைத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தீயால் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியது. இந்த தீ பரவியதால் சுமார் 2 கிமீ தூரத்திற்கு மரம், காய்ந்த செடி கொடி உள்ளிட்டவை எரிந்த சாம்பல் பரவியது.  மேலும், வனப்பகுதியில் இருந்த அரிய வகை மூலிகை உள்ளிட்டவை எரிந்து நாசமானதாக தெரிகிறது. மேலும், இந்த மலைகாட்டில் வசித்த வன உயிரினங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்க கூடும் என அருகில் வசித்து வரும் கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வனப்பகுதிகளுக்கு தீ வைப்போரை கைது செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

சென்னை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டது போன்ற மாயத்தோற்றம் உருவாக்கி கொண்டிருக்கிறார் : எடப்பாடி பழனிசாமி

செம்மொழி பூங்காவில் ‘ஊரும் உணவும்’ என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழா இன்று முதல் தொடக்கம்..!!