ஆம்னி பேருந்துகளில் பயணிகளை காந்திபுரம், டைடல் பார்க்கில் மட்டும் ஏற்ற வேண்டும்

 

கோவை, ஜூலை 23: கோவை மாநகரத்தில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதாலும், அவினாசி சாலையில் உயர்மட்ட பாலம் வேலை நடந்து கொண்டிருப்பதாலும், கோவை மாநகரில் இயங்கும் ஆம்னி பேருந்துகளால் இரவு நேரங்களில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, ஆம்னி பேருந்து பயணிகள் ஏற்றும் இடங்கள் காந்திபுரம் மற்றும் டைடல் பார்க் ஆகிய 2 இடங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து ஏறி செல்ல வேண்டும். காலதாமதமாக வரும் பயணிகளுக்காக பேருந்து நிறுத்தி வைக்க இயலாது. ஆம்னி பேருந்துகள் அதிக நேரம் சாலையில் நிறுத்தி போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என காவல் துறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்