ஆபத்தை உணராமல் குளியல் திருமுக்குளம் மண்டபத்தில் ஏறி ‘டைவ்’ அடிக்கும் இளைஞர்கள்

திருவில்லிபுத்தூர், டிச.25: திருவில்லிபுத்தூரில் நிரம்பியுள்ள குளத்தில் மைய பகுதியில் உள்ள மண்டபத்துக்குச் சென்று ஆபத்தை உணராமல் மேலே ஏறி தாவி குதிக்கும் இளைஞர்களால் விபரீதம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளம் தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையினால் நிரம்பி முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இவ்வாறு முழுமையாக நிரம்பி உள்ள குளத்தின் நடுவில் மைய மண்டபம் உள்ளது. இந்த மையம் மண்டபத்திற்கு இளைஞர்கள் கூட்டமாக செல்கின்றனர். பின்னர் மைய மண்டபத்தில் மேலே ஏறி அங்கிருந்து டைவ் அடித்து குளிக்கின்றனர்.

இந்த குளத்தை பொறுத்தவரை குளத்தின் படி அருகே இருந்து மையப்பகுதி செல்ல மிகுந்த சிரமமாக இருக்கும். அதையும் மீறி அங்கு கூட்டமாக செல்லும் இளைஞர்கள் மைய மண்டபத்திற்கு சென்று பின்னர் மேலே ஏறி ஆபத்தை உணராமல் குதிக்கின்றனர். ஏற்கனவே கோவில் குளம் நிறைந்து உள்ளதால் குளத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என காவல்துறையினரும் ஆண்டாள் கோயில் நிர்வாகத்தினரும் வருவாய் துறையினரும் தெரிவித்துள்ளனர். அதையும் மீறி இளைஞர்கள் மைய மண்டபத்திற்கு சென்று மேலே ஏறி குதித்து குளித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு