ஆபத்தான மேல்நிலை தொட்டியை இடித்து அகற்ற வலியுறுத்தல்

திருவாடானை, ஜூலை 31: திருவாடானை அருகே குஞ்சன்குளம் ஊராட்சியை சேர்ந்தது கண்ணன் புஞ்சை கிராமம். சுமார் 70க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்காக பல வருடங்களுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த குடிதண்ணீர் தொட்டி சிமெண்ட் காரைகள் அனைத்தும் பெயர்ந்து, கம்பிகள் அனைத்தும் வெளியே தெரிகிறது. இது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்ததால், மாற்று வழியில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயனற்ற நிலையில் அப்படியே இருந்து வருகிறது. இதனால் இவ்வழியில் செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். இந்த குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கண்ணன் புஞ்சை கிராம மக்கள் கூறுகையில், இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே இந்த குடிதண்ணீர் தொட்டியை உடனடியாக அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி