ஆன்லைன் ரம்மி தடை சட்ட விவகாரம் ஆளுநரை கண்டித்து 17ம் தேதி சவப்பெட்டி ஊர்வலம்: ஜவாஹிருல்லா எம்எல்ஏ அறிவிப்பு

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காததை கண்டித்து ஆளுநர் மாளிகை நோக்கி வரும் 17ம் தேதி சவப்பெட்டி ஊர்வலம் நடத்தப்படும் என்று ஜவாஹிருல்லா எம்எல்ஏ அறிவித்துள்ளார். மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நேற்று வெளியிட்ட அறிக்கை:    ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி நிறைவேற்றியது. ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை 142 நாட்கள் கிடப்பில் வைத்திருந்த நிலையில், இக்காலகட்டத்தில் 47 தமிழர்கள் தம் உயிரை மாய்த்துக் கொண்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார். தமிழ்நாடு ஆளுநரின் எதேச்சதிகார  செயலை கண்டித்தும், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட கிடப்பில் உள்ள அனைத்து சட்ட முன்வடிவுகளுக்கும் ஒப்புதல் வழங்க கோரியும் வரும் 17ம் தேதி மமக சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு சவப்பெட்டிகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு