ஆந்திராவுக்கு கடத்த முயன்றபோது லாரியுடன் 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திராவுக்கு கடத்திய 15 டன் ரேஷன் அரிசியை, குடிமைப்பொருள் அதிகாரிகள் மற்றும் போலீசார் லாரியுடன் பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்து சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்படி, குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர் வாசுதேவன் தலைமையில் அதிகாரிகள் பொன்னேரிக்கரை பகுதியில் காஞ்சிபுரம் தாலுகா போலீசாருடன் இணைந்து நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காஞ்சிபுரம் நோக்கி வேகமாக சென்ற லாரியை மறித்து நிறுத்தினர். அதிகாரிகளை கண்டதும் அதில் இருந்த டிரைவர், லாரியை நிறுத்திவிட்டு, கீழே குதித்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து, லாரியை சோதனை செய்தபோது, அதில் 15 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் லாரியுடன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்