ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் : ஒருவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல். லாரியை பறிமுதல் செய்து கடத்திலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனைடுத்து சோழவரம் அடுத்த காரனோடை சோதனைச் சாவடியில் தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சுந்தராம்பாள் தலைமையில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர்.  அதில் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் செங்குன்றம் திருப்பதி  நகரைச் சேர்ந்த வி.ராமச்சந்திரன் என்பதும் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஆந்திராவுக்கு 12 டன் ரேஷன் அரிசி கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட ராமச்சந்திரனை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும்,  12 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். …

Related posts

சென்னையில் ஆன்லைன் மூலம் 5 பேரிடம் ரூ.2.71 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மர்மநபர்களுக்கு போலீஸ் வலை

சென்னை மண்ணடியில் வாலிபரை கத்தியால் வெட்டி ரூ.50 லட்சம் கொள்ளை

காவிரியில் வெள்ளப்பெருக்கை பார்க்க சென்றவர் கட்டையால் அடித்து கல்லூரி மாணவர் கொலை: 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது