ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 30 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது

கும்மிடிப்பூண்டி: ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 30 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து இதுதொடர்பாக இருவரை கைது செய்தனர்.  தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கும்மிடிப்பூண்டி அடுத்த பஞ்செட்டியில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திரா நோக்கி சென்ற லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் தமிழக அரசு சார்பில் ஏழைகளுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி,  மூட்டை மூட்டையாக இருந்தது. அதன் மொத்த எடை 30 டன். இதையடுத்து, கடத்தல் ரேஷன் அரிசியை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரியில் வந்த இருவரை கைது செய்தனர். விசாரணையில், தஞ்சாவூரை சேர்ந்த முருகன்(42) மற்றும் சுகுமார்(45) என்பதும், இவர்கள் திருவொற்றியூரில் இருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரியவந்தது. தொடர்ந்து, ரேஷன் அரிசி மற்றும் கைதான இருவரையும் திருவள்ளூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்….

Related posts

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து 14.5 லட்சம் கொள்ளை!

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு