ஆத்தூரில் முற்றுகை போராட்டம்

நிலக்கோட்டை, ஜூலை 31:செம்பட்டி அருகே காமன்பட்டியை சேர்ந்த தம்பதி ஆண்டியகவுண்டர்- காமாட்சியம்மாள். இவர்களுக்கு 3 மகள்கள். 2 மகன்கள் உள்ளனர். தம்பதி இறந்த பின் காமாட்சியம்மாளுக்கு சொந்தமான நிலத்தை அவரது மகள் ஒருவர் தான் மட்டும் தான் ஒரே வாரிசு என போலியான சான்று பெற்று சின்னமணி என்பவருக்கு ஆத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த 25.4.2022ல் தானமாக பத்திரப்பதிவு செய்ததாகவும், பின்னர், அதே நிலத்தை 2 நாட்களுக்கு பின் 27.4.2022ல் ஜெயராம் என்பவருக்கு கிரைய பத்திரம் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மற்றொரு மகளின் மகன் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி நேற்று புகார் அளித்த நபர் உள்பட சிலர் ஆத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்