ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ₹23.78 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ₹23 கோடியே 78 லட்சத்து 34 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ளபுதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் ₹2 கோடியே 44 லட்சத்து 41 ஆயிரம் செலவிலும், வல்லத்தில் ₹1 கோடியே 27 லட்சத்து 12 ஆயிரம் செலவிலும், திருவாரூரில் ₹2 கோடியே 38 லட்சத்து 9 ஆயிரம் செலவிலும், கோட்டூர் மற்றும் நன்னிலத்தில் தலா ₹1 கோடியே 27 லட்சத்து 12 ஆயிரம் செலவிலும் கட்டப்பட்டுள்ள 5 ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதி கட்டிடங்கள், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஆகிய இடங்களில் தலா ₹1 கோடியே 27 லட்சத்து 12 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 2 ஆதிதிராவிடர் பள்ளி மாணவியர் விடுதி கட்டிடங்கள், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ₹1 கோடியே 26 லட்சத்து 9 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதி கட்டிடம், திருச்சி மாவட்டம் செங்காட்டுப்பட்டியில் ₹3 கோடியே 60 லட்சம் செலவிலும், திருப்பத்தூர் மாவட்டம் அத்தனாவூரில் ₹1 கோடியே 35 லட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ள 2 பழங்குடியினர் பள்ளி மாணவ, மாணவியர் விடுதி கட்டிடங்கள் திறக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் செங்கரையில் ₹1 கோடியே 54 லட்சத்து 45 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் மேல்நிலை பள்ளி கட்டிடம், நாமக்கல் மாவட்டம் செங்கரையில் ₹3 கோடியே 61 லட்சம் செலவில் மற்றும் நீலகிரி மாவட்டம் மு.பாலாடாவில் ₹1 கோடியே 23 லட்சத்து 70 ஆயிரம் செலவிலும் கட்டப்பட்டுள்ள உண்டி உறைவிட பள்ளி கட்டிடங்கள் என மொத்தம் ₹23 கோடியே 78 லட்சத்து 34 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமை செயலாளர் இறையன்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் மணிவாசன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் விவேகானந்தன், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் வி.சி.ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்